Home வாழ் நலம் கூந்தல் பராமரிப்பதற்கான வழிகள்

கூந்தல் பராமரிப்பதற்கான வழிகள்

617
0
SHARE
Ad

hairகோலாலம்பூர், மார்ச்.7- இளம் நரைக்குப் பித்தம்தான் காரணம். கவலையும் மனச்சோர்வும் தலையைப் பலவீனப்படுத்தி நரையை ஏற்படுத்தும். அதிகம் காபி தேநீர் பருகினால் பித்தம் ஏற்படும். இளம் நரையைத் தடுக்க பச்சைக் காய்கறிகள்  பழ வகைகள் நிறையச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வெந்தயக் கீரையை அரைத்துத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்து தலையை அலசினால் கூந்தல் உதிர்வது குறையும்.

முதல்நாள் இரவு இரண்டு கைப்பிடி வேப்பிலையை இரண்டு குவளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பின் மறுநாள் காலை தலைக்குக் குளிக்கும்போது தலையை அந்த நீரில் அலசினால் பேன் தொல்லை நீங்கும்.

#TamilSchoolmychoice

வாரம் ஒருநாள் காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை அரைத்து உருண்டையளவு சாப்பிட்டு வந்தால் இளநரை மறையும்.

செம்பருத்தி இலையைக் கொதிக்கும் வெந்நீரில் போட்டு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் இலையை எடுத்துப் பிழிந்து, அதன் சாற்றை எடுத்து தலையில் பூசி குளித்து வந்தால் முடி கரு கருவென வளரும்.

வாரம் ஒருமுறை தவறாமல் முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் மூன்று மாத காலம் குளித்துப்பாருங்கள். எந்தக் காரணத்தினால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். இந்தக் கீரை நரை விழுவதையும் தடுக்கும்.

புளிப்புச் சுவை கொண்ட உணவுப்பொருள்களை அதிக அளவில் உண்பது தலை முடிக்குப் பாதிப்பினை ஏற்படுத்தும்.