Home நிகழ்வுகள் சிராம்பானில் ‘மணி விருது’ வழங்கும் விழா

சிராம்பானில் ‘மணி விருது’ வழங்கும் விழா

814
0
SHARE
Ad

dato-saraசிரம்பான், மார்ச்.7- நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் இளைஞர்  மணிமன்றப் பேரவையின் ஏற்பாட்டில் தேசிய அளவிலான மணிமன்ற நாள் கொண்டாட்டமும் வருடாந்திர ‘மணி விருது’ வழங்கும் நிகழ்வும் ஒரு சேர நடைபெறுகிறது.

இந்நிகழ்வு 9.3.2013 சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு  சிரம்பான் நகராண்மைக் கழக மண்டபத்தில் நடைபெறுகிறது.

வெகு விமரிசையாக நடைபெறும் இந்த மணிமன்ற நாள் கொண்டாட்டத்திற்கு, கூட்டரசு நகர்புற நல்வாழ்வுத்துறை  துணையமைச்சரும் ம.இ.கா தேசிய உதவித் தலைவருமான டத்தோ. எம். சரவணன் சிறப்பு வருகை தந்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றுவார்.

#TamilSchoolmychoice

அவருடன் மணிமன்றங்களின்  முன்னாள் தேசியத் தலைவர்களும்  அரசியல் சமய சமூக இயக்கஙகளின் தலைவர்களும் பொறுப்பாளர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் என்று தேசியத் தலைவரும் மாநில மன்றப் பேரவையின்  மணிவேல் கு.முரளி தெரிவித்தார்.

தேசியப் பேரவையின் ஆதரவோடு நடைபெறும் இந்த மணிமன்ற நாள் விழாவில் நாடு தழுவிய நிலையிலிருந்து நெகிரி மாநிலத்திலிருந்து சுமார் ஆயிரம் பேர் திரண்டு வரவிருக்கின்றனர் என்று கூறிய முரளி இந்த அரிய சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.

மேல் விவரங்களுக்கு, எஸ். ஆறுமுகம் 019-6081818  மற்றும்  பா.கர்ணன் 016-9272285 என்ற எண்களின் வழி தொடர்புக் கொள்ளலாம்.