Home Featured கலையுலகம் “ருத்ரமாதேவி” – இன்று வெளியாகும் 80 கோடி ரூபாய் பிரம்மாண்டம் – வசூலில் கலக்குமா?

“ருத்ரமாதேவி” – இன்று வெளியாகும் 80 கோடி ரூபாய் பிரம்மாண்டம் – வசூலில் கலக்குமா?

864
0
SHARE
Ad

Rudhramadeviகோலாலம்பூர் – இப்போது பிரம்மாண்டமான, சரித்திரம் பேசும், தென்னிந்திய திரைப்படங்களின் காலம் போலும். அண்மையில் வெளிவந்து வசூலில் கலக்கிய பாகுபலி, அடுத்து வந்து, வசூலில் சமாளித்துக் கொண்டாலும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளான புலி – ஆகிய படங்களை அடுத்து, தென்னிந்திய இரசிகர்களின் ஆவலைக் கிளப்பியிருக்கும் படம் இன்று உலக அளவிலும், மலேசியாவிலும் வெளியாகும் ‘ருத்ரமாதேவி’.

அனுஷ்காவின் அழகையும் கவர்ச்சியையும் எதிர்பார்த்து “பாகுபலி” பார்க்கப் போன இரசிகர்கள், வயதான அனுஷ்காவைப் மட்டும் பார்த்து விட்டு நொந்து போய் வந்தது அவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்ற இரகசியம்.

இருந்தாலும் அனுஷ்காவின் கவர்ச்சிக்கு இரண்டாம் பாகத்தில் பந்தி வைக்கின்றேன் என்று கூறாமல் கூறியிருக்கும் இயக்குநர் இராஜமௌலி, பாகுபலியில் பழங்கால முறையில் கச்சை கட்டிய தமன்னாவை வைத்து கவர்ச்சித் தோரணம் கட்டி (காட்டி) இரசிகர்களை ஓரளவுக்கு மகிழ்வித்திருந்தார்.

#TamilSchoolmychoice

Rudhramadevi - anushka-nithya menon-catherine theresaஆனால், ருத்ரமாதேவியில் அந்தப் பஞ்சம் இருக்காது. காரணம் அனுஷ்காவைத் தவிர, காஞ்சனா-2 மற்றும் ஓகே கண்மணி படங்களில் கலக்கிய நித்யா மேனன், மெட்ராஸ் படத்தில் அனைவரையும் கவர்ந்த கேத்தரின் திரேசா என மூன்று அழகுப் பதுமைகளை முக்கிய கதாபாத்திரங்களில் களம் இறக்கியுள்ளனர்.

குணசேகர் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம் 80 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு-தமிழ் மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பு கடந்த வாரமே வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகின்றது. இதுவரையில் 40 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழிலும் இந்தப் படம் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தப் படத்தின் திரைவிமர்சனம் இன்று செல்லியலில் வெளியாகும்