இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் இலாப நோக்கற்ற, அரசியல் தலையீடு இல்லாத அமைப்பு தான் ஆசியா ஹவுஸ். இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும், ஆசிய அளவில் வர்த்தக ரீதியாக சிறந்த தலைமையும், தார்மீக நம்பிக்கையும் ஏற்படுத்துபவர்களுக்கு விருதினை அளித்து கௌரவித்து வருகிறது. அதன் படி, இந்த ஆண்டு, ஆசிய-பசிபிக் பகுதியில் இருக்கும் மிகப் பெரிய முதலீட்டு வங்கியான சிஐஎம்பி குழுமத்தில், 26 வருடங்களாக சேவையாற்றி வரும் நசிர் ரசாக்கை இந்த விருதிற்கு தேர்வு செய்தது.
“இந்த விருது உண்மையில் எனக்கு மிகப் பெரிய கௌரவத்தை அளிக்கிறது. இந்த தருணத்தில் நான் அதிக பூரிப்படைந்துள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில், ஏர் ஆசியா தலைவர் டோனி பெர்னாண்டஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர்.