Home வணிகம்/தொழில் நுட்பம் பிலிப்பைன்சிலும் கால் பதிக்கிறது சிஐஎம்பி வங்கி

பிலிப்பைன்சிலும் கால் பதிக்கிறது சிஐஎம்பி வங்கி

1646
0
SHARE
Ad

மணிலா – மலேசியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான சிஐஎம்பி வங்கி (CIMB) ஏற்கனவே இந்தோனிசியா போன்ற அண்டை நாடுகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

தற்போது ஆசியான் நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சிலும் கால் பதிக்கின்றது சிஐஎம்பி வங்கி.

சிஐஎம்பி பேங்க் பிலிப்பைன்ஸ் இன்கொர்ப்பரேட்டட் (CIMB Bank Philippines Inc.) என்ற பெயரில் இயங்கவிருக்கும் இந்த வங்கி நவீன மயமான முறையில், முழுமையாக மின்னியல் முறையில் செயல்படத் தொடங்கும்.

#TamilSchoolmychoice

சிஐஎம்பி பிலிப்பைன்ஸ் வங்கி நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாரபூர்வமாக மணிலாவில் தொடக்கம் கண்டது. பிலிப்பைன்ஸ் சிஐஎம்பி வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக விஜய் மனோகரன் செயல்படுகிறார். பிலிப்பைன்ஸ் மக்களுக்கு புதிய, நவீன வங்கி அனுபவத்தைத் தாங்கள் வழங்கப் போவதாகவும் விஜய் மனோகரன் தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கால் பதிப்பதன் மூலம், தற்போது ஆசியான் ஒன்றியத்தின் 10 நாடுகளிலும் 800 கிளைகளுடன் சிஐஎம்பி இயங்கி வருகிறது.