இஸ்தானா நெகாராவில், இன்று நடைபெற இருக்கும், நாட்டின் 16-வது மாமன்னருக்கான பதவி ஏற்கும் விழாவில் கலந்துக் கொள்வதற்காக சுல்தான் அப்துல்லா உடன் அவரது துணைவியார் பேரரசியார் துங்கு அசிசாவும் வருகை புரிந்துள்ளார்.
ராஜா மூடா சிலாங்கூர், தெங்கு அமிர் ஷா மற்றும் தெங்கு லக்சாமானா சிலாங்கூர், தெங்கு சுலாய்மான் ஷா ஆகியோர் விமான நிலையத்தில், மாமன்னரையும் , பேரரசியாரையும் வரவேற்றனர்.
பின்னர் கோலாலம்பூர் நாடாளுமன்ற வளாகத்தை வந்தடைந்த மாமன்னரை, பிரதமர் துன் மகாதீர் முகமட், துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ வான் அசிசா, மற்றும் இதர அமைச்சர்களும் வரவேற்றனர். சிறப்பு பிரார்த்தனைக்குப் பின்னர் சுல்தான் அப்துல்லா இஸ்தானா நெகாராவில் 16-வது மாமன்னராகப் பதவி ஏற்பார்.