Home Featured நாடு 2.6 பில்லியன் நன்கொடை: அனினாவின் வழக்கை நிராகரித்தது நீதிமன்றம்!

2.6 பில்லியன் நன்கொடை: அனினாவின் வழக்கை நிராகரித்தது நீதிமன்றம்!

900
0
SHARE
Ad

Anina Najibகோலாலம்பூர் – 2.6 பில்லியன் அரசியல் நன்கொடை தொடர்பில் முன்னாள் லங்காவி அம்னோ மகளிர் உறுப்பினர் அனினா சாடுடின், தாக்கல் செய்திருந்த சிவில் வழக்கை உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், கட்சியின் பொதுச்செயல் அதிகாரி டத்தோ அப்துல் ராவுப் யூசோப் ஆகியோருக்கு எதிரான இந்த வழக்கு, “தெளிவாக, வெளிப்படையாக சட்ட பராமரிப்பில் இல்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதி மொகமட் சாக்கி அப்துல் வாகாப் தெரிவித்துள்ளார்.

“மனுதாரரின் இந்த நடவடிக்கையில் எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லை என்பதை நான் கண்டறிந்துள்ளேன்” என்று மொகமட் சாக்கி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice