Home Featured நாடு அனினாவின் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றமும் நிராகரித்தது!

அனினாவின் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றமும் நிராகரித்தது!

557
0
SHARE
Ad

Anina Najibகோலாலம்பூர் – கட்சியிலிருந்து தான் நீக்கப்பட்ட விவகாரத்தில், லங்காவி முன்னாள் அம்னோ உறுப்பினர் அனினா சாடுடினின், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை  விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் அதனை நிராகரித்தது.

2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரத்தில் அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக வழக்குத் தொடுத்ததால், அனினா கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், தான் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

#TamilSchoolmychoice

அவ்வழக்கை விசாரணை செய்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கிய தீர்ப்பில், சங்கங்களின் சட்டம் 1966 பிரிவு 18C, இந்த மனுவை ஏற்பதைத் தடுக்கிறது என்று கூறி அவரது மனுவை நிராகரித்தது

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த அனினாவின் மனுவை இன்று விசாரணை செய்த நீதிபதி டேவிட் வோங் உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அம்மனுவை நிராகரித்தனர்.