லண்டன் – தற்போது இங்கிலாந்து நாட்டின் ராணியாக இருப்பவர் இரண்டாம் எலிசபெத். இவர் இன்று தனது 90-வது பிறந்த தினத்தை கொண்டாடினார். ராணி எலிசபெத்தின் தந்தையான மன்னர் ஆறாம் ஜார்ஜ், 1952–ஆம் ஆண்டு பிப்ரவரி 6–ஆம் தேதி மரணமடைந்தார்.
அவரது மறைவுக்கு பிறகு எலிசபெத், இங்கிலாந்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றார். அவரது பதவி ஏற்பு விழா 1953–ஆம் ஆண்டு ஜூன் 2–ஆம் தேதி நடைபெற்றது. இதனால், கடந்த ஆண்டில் தனது முப்பாட்டியின் சாதனையான 63 ஆண்டுகள் 216 நாள் ஆட்சி என்ற சாதனையை ராணி எலிசபெத் முறியத்தார்.
இராணி எலிசபெத் காலத்தில் வின்ஸ்டன் சர்ச்சில் தொடங்கி டேவிட் கேம்ரூன் வரை மொத்தம் 12 பிரதமர்களை அவர் சந்தித்துள்ளார். எலிசபெத் உலகம் முழுவதும் 117 நாடுகளில் 1.7 மில்லியன் கிலோமீட்டர் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு பயணக்கடப்பிதழ் (பாஸ்போர்ட்) இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.