Home Featured தமிழ் நாடு இன்னும் எத்தனை பேரைக் கொன்று ஜெயலலிதா பிரச்சாரம் செய்வார்? – ஸ்டாலின் வேதனை!

இன்னும் எத்தனை பேரைக் கொன்று ஜெயலலிதா பிரச்சாரம் செய்வார்? – ஸ்டாலின் வேதனை!

649
0
SHARE
Ad

stalinவிழுப்புரம் – மக்கள் நலனைச் சிந்திக்காமல், தனது வசதிக்காக வெயில் சுட்டெரிக்கும் பகல் நேரங்களில் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தி, உயிரிழப்புகளுக்கு காரணமாகும் ஜெயலலிதா, இன்னும் எத்தனை பிணங்களின் மீது பிரச்சாரம் மேற்கொள்ளப் போகிறார் என திமுக பொருளாளர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட வானூர், மயிலம், கள்ளக்குறிச்சி, விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:- சேலத்தில் ஜெயலலிதா பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் இரண்டு பேர் இறந்திருக்கிறார்கள். கூட்ட நெரிசலில் சிக்கி அவர்கள் இறக்கவில்லை. வெயில் கொடுமையால் இறந்திருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

வானிலை மையம் வெயிலில் தாக்கத்தை பற்றி எச்சரிக்கை செய்திருக்கிறது. ஆனால் இந்த அம்மையார் 2 மணிக்கு பிரச்சாரத்திற்கு வருகிறார். ஏன் 2 மணிக்கு கூட்டம் நடத்த நேரத்தை தேர்ந்தெடுக்கிறார் என்பதை நீங்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

மாலை 5 மணிக்கெல்லாம் ஹெலிகாப்டர் சென்னைக்கு சென்று இறங்கி விட வேண்டும். சூரியன் இருக்கும் போதுதான் ஹெலிகாப்டரை இறக்க முடியும். சூரியன் மறைந்த பிறகு அதை கீழே இறக்க முடியாது. ஆக, அவரது வசதிக்காக 2 பேர் விருத்தாச்சலத்திலும் நேற்று 2 பேர் சேலத்திலும் இறந்துள்ளனர்.

இவர்களுக்கு பிறகாவது அந்த அம்மையாருக்கு புத்தி வந்ததா என்றால் இல்லை. இதைவிட ஒரு கொடுமை என்ன என்று கேட்டால், ஒரு பெண் போலீஸ் அதிகாரி, பொதுக்கூட்டத்தில் வெயில் கொடுமை தாங்கமுடியாமல் மயக்கமடைந்து உயிருக்கு போராடக் கூடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

உச்சி வெயிலில் பிரச்சாரக்கூட்டம் நடத்துவதால் உயிர்‌‌பலி தொடர்ந்து நடந்துக்கொண்டு இருக்கிறது. இன்னும் எத்தனை பிணங்களின் மீது ஜெயலலிதா பிரச்சாரம்மேற்கொள்ளப் போகிறார்.

இதைவிட கொடுமை வேறு என்ன நடக்க வேண்டும். மனித உயிர்களுக்கு எந்தளவு மதிப்பு கொடுக்கிறார்கள் என்று தயவுசெய்து நீங்கள் சிந்திக்க வேண்டும் என ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.