

புதுடெல்லி : மறைந்த பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு இலண்டன் சென்றுள்ளார்.
இந்திய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் திரௌபதி முர்மு கலந்து கொள்ளும் முதல் வெளிநாட்டு நிகழ்ச்சியாக எலிசபெத் ராணியாரின் இறுதிச் சடங்குகள் அமைந்திருக்கிறது.
மேலும், திங்கட்கிழமை செப்டம்பர் 19-ம் தேதி லண்டனில் நடைபெற உள்ள அரசியாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் இலண்டன் வரத் தொடங்கியுள்ளனர்.
இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக இலண்டன் சென்றுள்ளார் முர்மு.