Home நாடு மித்ரா இனிமேல் பிரதமர் துறையின் கீழ் செயல்படும் – இஸ்மாயில் சாப்ரி அறிவிப்பு

மித்ரா இனிமேல் பிரதமர் துறையின் கீழ் செயல்படும் – இஸ்மாயில் சாப்ரி அறிவிப்பு

458
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தற்போது ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் மித்ரா என்னும் இந்தியர் உருமாற்ற அமைப்பு இனிமேல் பிரதமர் துறையின் கீழ் செயல்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி அறிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற மஇகா இளைஞர் பணிப்படை தொடக்கவிழாக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். தனதுரையில் அவர் மித்ராவை பிரதமர் துறையின் கீழ் செயல்படவைக்கும் முடிவை அறிவித்தார்.

நஜிப் பிரதமராக இருந்தபோது தொடங்கப்பட்ட செடிக் என்னும் இந்தியர் உருமாற்றத் திட்ட அமைப்பு பிரதமர் இலாகாவின் கீழ் செயல்பட்டது. துன் மகாதீர் பிரதமரானதும் அந்த அமைப்பு மித்ரா எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் மாற்றப்பட்டது.

#TamilSchoolmychoice

மித்ராவில் எழுந்த ஊழல் புகார்களைத் தொடர்ந்து அந்த அமைப்பு பிரதமர் துறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக விடுக்கப்பட்டு வந்தன.