Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : ‘ஒரு கலைஞனின் டைரி’ நாடகத் தொடர்

ஆஸ்ட்ரோ : ‘ஒரு கலைஞனின் டைரி’ நாடகத் தொடர்

453
0
SHARE
Ad

செப்டம்பரில் ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்பாகும் பல உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழுங்கள் –
‘அபாய சங்கிலி’ எனும் நாடக டெலிமூவியும் ‘ஒரு கலைஞனின் டைரி’ எனும் நாடகத் தொடரும்

கோலாலம்பூர் – நாடக டெலிமூவி, அபாய சங்கிலி மற்றும் நாடகத் தொடர், ஒரு கலைஞனின் டைரி உள்ளிட்ட முதல் ஒளிபரப்பாகும் மேலும் அதிகமான உள்ளூர் நிகழ்ச்சிகளை டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் இச்செப்டம்பர் மாதம் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்க்கலாம்.

நாடக டெலிமூவியான அபாய சங்கிலி, ஒரு திருமணமானத் தம்பதிகள் ஒற்றுமையாக உளவியல் நோயைத் தீர்க்க முயற்சிக்கும் சுவாரசியமானக் கதையைச் சித்திரிக்கின்றது.

#TamilSchoolmychoice

உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளரான அரவின் வர்மன் இயக்கிய இந்த டெலிமூவியில் மகேந்திரன் ராமன், புனிதா சண்முகம், நித்யா ஸ்ரீ உட்படப் பலத் திறமையான உள்ளூர் நடிகர்கள் நடித்துள்ளனர். தனது அதிர்ச்சிகரமானக் கடந்தக் காலத்தின் காரணமாக விலகல் ஆளுமைப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டத் தேவ்வைப் பற்றியக் கதை.

தன் உடல் நலப் பிரச்சனையால்தான் தன் மனைவி, திவ்யா தன்னை விட்டு விலகுகிறார் என தன் மனைவின் நோக்கங்களைத் தவறாகப் புரிந்துக் கொள்கிறார், தேவ். தவறான முறையில் நடத்தும் தன் கணவனின் பிடியில் இருந்துத் தன்னை விடுவித்துக் கொள்வதோடு தேவ் குணமடையவும் உதவுகிறார், திவ்யா.

அபாய சங்கிலி, கடந்த செப்டம்பர் 16, இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் முதல் ஒளிபரப்பு கண்டது. அதைப் பார்க்காமல் தவறவிட்டவர்கள் ஆஸ்ட்ரோ ஒன் டிமாண்ட் தளத்தில் பார்க்கலாம்.

ஒரு கலைஞனின் டைரி தொலைக்காட்சித் தொடர்

உள்ளூர் இயக்குநர், எஸ்.பாலச்சந்திரன் கைவண்ணத்தில் மலர்ந்த, ரவின் ராவ் சந்திரன், கவிதா சின்யா, கிருத்திகா நாயர் போன்றத் திறமையான உள்ளூர் கலைஞர்கள் நடித்த ஒரு கலைஞனின் டைரி எனும் நாடகத் தொடரையும் வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.

ஒரு சமயத்தில், போதைப்பொருட்களுக்கு அடிமையாகிய இருண்டப் பக்கத்தைக் கொண்டிருந்தாலும் உள்ளூர் கலைத்துறையில் புகழ்பெற்ற இசையமைப்பாளராகத் தடம் பதிக்க வேண்டும் என முயற்சிக்கும் வருண் என்ற ஆர்வமுள்ள இசையமைப்பாளரைப் பற்றியக் கதையை இத்தொடர் சித்திரிக்கின்றது.

ஒரு கலைஞனின் டைரி, திங்கட்கிழமை செப்டம்பர் 19, இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் முதல் ஒளிபரப்புக் காணுகிறது. இத்தொடரின் புதிய அத்தியாயங்கள் ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை முதல் ஒளிபரப்புக் காணும்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.