Home நாடு பிரதமர் தன் காதல் கதையை விவரித்தார்

பிரதமர் தன் காதல் கதையை விவரித்தார்

564
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி தன் மனைவியுடனான இளமைக் கால காதல் சம்பவங்களை தன் முகநூல் பக்கத்தில் நினைவு கூர்ந்தார்.

மலேசிய தினத்தை முன்னிட்டு மலாக்கா ஆயர் குரோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பும்போது அங்குள்ள மேக் டோனால்ட் உணவகத்தில் தன் மனைவியுடன் அமர்ந்து உணவருந்தினார் பிரதமர்.

அப்போது தன் மனதில் எழுந்த பழைய காதல் எண்ணங்களை தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

“மேக் டொனால்ட் உணவகத்தில் அமர்ந்து உணவருந்தும்போது எனக்குப் பழைய ஞாபகங்கள் வந்தன. நானும் என் மனைவியும் காதலர்களாகத் திரிந்த காலம் அது. நான் ஆறாம் படிவத்தில் இரண்டாம் ஆண்டிலும், என் துணைவியார் ஆறாம் படிவம் முதலாம் ஆண்டிலும் படித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் காதலித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஏ அண்ட் டபிள்யூ, கெண்டக்கி பிரைட் சிக்கன், டெக்சாஸ் பிரைட் சிக்கன் போன்ற துரித உணவகங்களில் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொள்வோம். என்னிடம் கொஞ்சம் கூடுதலாகப் பணம் இருந்தால், நான் துணைவியாரை அழைத்துக் கொண்டு கொலிசியம் கஃபே உணவகத்திற்குச் செல்வேன். இப்போதோ கல்யாணமாகி நாங்கள் இருவரும் தாத்தா – பாட்டியாகி விட்டோம். ஆனால் எங்களுக்கிடையிலான காதல் இன்னும் குறையவில்லை” என இஸ்மாயில் சாப்ரி தன் பதிவில் தெரிவித்திருக்கிறார்.