Home இந்தியா அன்வார் – இந்திய அதிபர் திரௌபதி முர்மு சந்திப்பு

அன்வார் – இந்திய அதிபர் திரௌபதி முர்மு சந்திப்பு

337
0
SHARE
Ad

புதுடில்லி : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது இந்திய வருகை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்திய அதிபர் திரௌபதி முர்முவை இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) அதிபர் மாளிகையில் சந்தித்தார்.

தங்களின் சந்திப்பு திருப்திகரமான அளவில் இருந்ததாகவும், மலேசியா-இந்தியா நல்லுறவை மேலும் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் தனது இந்திய வருகை அமைந்திருந்ததாகவும் அன்வார் இந்த சந்திப்பு குறித்து தெரிவித்தார்.

முன்னதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அன்வார் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்துப் பேசினார்.

#TamilSchoolmychoice

Comments