இந்த வெற்றி விழா விருந்து நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையன்றே சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இயக்குநர் அட்லி, விஜய், பேபி நைனிகா, அவரது அம்மா நடிகை மீனா, இயக்குநர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் முதல் நான்கு நாட்களில் இந்தப் படம் ரூ.57 கோடி வரை வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தில் முதல் வார முடிவில் ‘எந்திரன்’ பட வசூலை விட ‘தெறி’ படம் அதிகம் வசூலித்திருப்பதாக படக்குழுவினர்கள் கூறுகிறார்கள். அதிகாரப்பூர்வ வசூல் விவரங்கள் நாளை வெளியிடப்படும் என கலைப்புலி தாணு கூறியுள்ளார்.