Home Featured தொழில் நுட்பம் ஆப்பிள் துணையில்லாமல் ஐபோன் உள்ளடக்கத்தை எஃபிஐ கண்டு பிடித்தது! மோதல் முடிவுக்கு வந்தது

ஆப்பிள் துணையில்லாமல் ஐபோன் உள்ளடக்கத்தை எஃபிஐ கண்டு பிடித்தது! மோதல் முடிவுக்கு வந்தது

1097
0
SHARE
Ad

Apple and FBI to face off in courtவாஷிங்டன் – சான் பெர்னார்டினோ என்ற இடத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின்போது அங்கு கண்டெடுக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் ஒன்றின் தொழில் நுட்ப உள்ளடக்கத்தை கண்டுபிடிக்க எஃபிஐ முனைந்தது. அதன் மூலம் பயங்கரவாதிகளின் தகவல்களைப் பெற முடியும் என்பது அதன் திட்டம்.

ஆனால், ஆப்பிள் நிறுவனமோ, எங்களின் தொழில்நுட்ப ரகசியத்தை எங்களால் வெளியிட முடியாது என்றும் இது தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதற்கு ஒப்பாகும் என்றும் மறுப்பு தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து எஃபிஐ நீதிமன்றத்தில் ஆப்பிளுக்கு எதிராக வழக்கும் தொடர்ந்தது.

#TamilSchoolmychoice

ஆனால், தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் துணையில்லாமலேயே, தாக்குதல் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அந்த ஐபோனின் உள்ளடக்கத்தை எஃபிஐ கண்டறிந்துள்ளது. பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவன் எனக் கருதப்படும் சைட் ரிஸ்வான் பாரூக் என்பவனின் ஐபோன் உள்ளடக்கத்தையும், தரவுகளையும் (data) FBIமூன்றாம் தரப்பு ஒன்றின் துணையுடன் ஐபோனின் உள்ளடக்கச் செயல்பாட்டையும், அதில் பொதிந்திருக்கும் தகவல்களையும் எஃபிஐ கண்டுபிடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் மீது இது தொடர்பில் தொடுத்த நீதிமன்ற வழக்கை எஃபிஐ மீட்டுக் கொண்டுள்ளது.

எஃபிஐ ஆப்பிளுக்கு எதிரான வழக்கை மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, ஓர் அரசாங்கப் புலனாய்வுத் துறை தனிநபர் ஒருவரின் சுதந்திரத்தில் தலையிடும் வண்ணம் அந்த நபரின் தகவல்கள் அடங்கிய கைத்தொலைபேசியின் உள்ளடக்கத் தரவுகளை பெறுவது நியாயமா?

அப்படிப் பெறுவதற்கு அந்தக் கைத்தொலைபேசியைத் தயாரித்த நிறுவனத்தை வற்புறுத்துவது தகுமா?

என அமெரிக்காவில் எழுந்த சர்ச்சைகள் ஒரு முடிவுக்கு வந்துள்ளன.