Home Featured வணிகம் ரயானி ஏர் சேவை நிறுத்தம்!

ரயானி ஏர் சேவை நிறுத்தம்!

1410
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஷரியா கோட்பாடுகளைக் கொண்ட மலேசியாவின் முதல் விமான நிறுவனமான ரயானி ஏர் தனது இயக்கங்களை தற்காலிக நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

இன்று காலை ஸ்டார் மலாய் செய்தி இணையதளத்திற்கு அந்நிறுவனத்தின் தலைவர் ரவி அழகேந்திரன் அளித்துள்ள தகவலில், ஏப்ரல் 8-ம் தேதி முதல் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் இந்த தற்காலிக சேவை நிறுத்தம் இருக்கும் என்றும், எவ்வளவு காலம் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Rayaniairவிமானிகள் வேலை நிறுத்தம் செய்ததையடுத்து, தற்காலிக நிறுத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ரவி உறுதிப்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

முன்பதிவு செய்த பயணிகள் பணத்தைத் திரும்பப் பெறுவது மற்றும் கேள்விகளுக்கு, ரயானி மின்னஞ்சல் முகவரி (info@rayaniair.com)அல்லது வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி எண் (+603-27214925) ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளும்படியும் ரவி கேட்டுக் கொண்டுள்ளதாக ஸ்டார் கூறுகின்றது.

விமானிகள் வேலைநிறுத்தம் செய்த காரணத்தால், கடைசி நேரத்தில் விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

நேற்று மட்டும், கோலாலம்பூரில் இருந்து லங்காவி, கோத்தா கினபாலு மற்றும் கூச்சிங் ஆகிய இடங்களுக்குச் செல்லும் மூன்று விமானங்கள் கடைசி நேரத்தில் இரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.