Home Featured தமிழ் நாடு திமுக கூட்டணி: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

திமுக கூட்டணி: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

885
0
SHARE
Ad

சென்னை – எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடுகள் கட்டம் கட்டமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

Karunanithi-Indian Union Muslim League-இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடனான உடன்பாட்டின்போது….

இன்னும் கருணாநிதியின் உறுதியான பிடியில்தான் திமுக செயல்படுகின்றது என்பதைக் காட்டும் விதமாகவும், அவரது முடிவுக்கேற்பத்தான் கூட்டணி கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன என்பதைக் காட்டும் விதமாகவும், அவரது முன்னிலையிலேயே கூட்டணி உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த சமயங்களில் கூடவே இருப்பவர்கள், கலைஞரின் வாரிசுகள் மு.க.ஸ்டாலினும், கனிமொழியும்தான்! மற்ற சில திமுக தலைவர்களும் உடனிருக்கின்றார்கள்.

#TamilSchoolmychoice

திமுக கூட்டணியில் காதர் மொய்தீன் தலைமையில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் நேற்று ஏற்பட்ட உடன்படிக்கையின் வழி, கீழ்க்காணும் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன:-

  1. வாணியம்பாடி
  2. கடையநல்லூர்
  3. பூம்புகார்
  4. விழுப்புரம்
  5. மணப்பாறை