ஜோர்ஜ் டவுன் – நேற்று மாலை ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு, இரவு முழுவதும் காவலில் வைக்கப்பட்டிருந்த பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கிற்கு ஆதரவாகத் திரண்ட ஜசெக ஆதரவாளர்கள், அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்தின் முன் திரண்டு, மெழுகுவர்த்திகள் ஏந்தி, விழிப்புப் போராட்டம் நடத்தினர்.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் மாநிலத் தலைமையகத்தின் முன் திரண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் லிம் கிட் சியாங் – அமானா கட்சித் தலைவர் முகமட் சாபு…
அப்போது அவர்களுடன் இணைந்து கொண்ட ஜசெக தலைவர் லிம் கிட் சியாங், தனது மகன் என்ற முறையிலும், தனது கட்சியின் தலைமைச் செயலாளர் என்ற முறையிலும் லிம் குவான் எங்கிற்கு ஆதரவு தெரிவித்தார்.
கலந்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களிடையே கிட் சியாங் உரையாற்றினார்.
ஆதரவாளர்களிடையே ஒலிபெருக்கியில் உரையாற்றும் லிம் கிட் சியாங்….
நேற்று நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாலை 12.15 மணியளவில், லிம் கிட் சியாங் ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டார் என டுவிட்டர் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.
ஒரு தந்தையின் கவலை – லிம் குவான் எங் காவலில் வைக்கப்பட்டிருக்க,சோகத்துடன் வெளியே காத்திருக்கும் லிம் கிட் சியாங்