சென்னை: நகைச்சுவைக் காட்சிகளுக்கும் திரைப்படங்களுக்கும் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் இயக்குநர் சுந்தர் சி. குறிப்பாக வைகைப் புயல் வடிவேலுவை முன்னிருத்தி பல மறக்க முடியாத கதாபாரத்திரங்களை உருவாக்கி வெள்ளித் திரையில் உலவ விட்டவர்.
அவரே இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படம் கேங்கர்ஸ். இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வடிவேலு.
அந்தப் படத்தின் முன்னோட்டம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வெளியாகி யூடியூப் தளத்தில் மட்டும் 4 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
கேங்ஸ்டர்ஸ் என்ற வார்த்தை ஏற்கனவே இருப்பதால் புதிதாக ‘கேங்கர்ஸ்’ என்ற வார்த்தையை உருவாக்கியிருப்பதாக வடிவேலு பேசுவதாக ஒரு வசனம் படத்தின் முன்னோட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது.
பழையபடி நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருப்பதால் இந்தப் படம் வெற்றியடைந்தால் அவர் தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஒரு சுற்று வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எதிர்வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியாகவிருக்கும் கேங்கர்ஸ் திரைப்படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: