கோலாலம்பூர் – விரைவில், கோலாலம்பூருக்கு நடுவே, 26.7 ஹெக்டார் பரப்பளவில் மிகப் பெரிய பூங்கா ஒன்று அமைக்கப்படவுள்ளது.
650 மில்லியன் ரிங்கிட் செலவில், தாமான் துகு திட்டம் என அழைக்கப்படும் இத்திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.
துகு நெகாரா என்ற பகுதி சுமார் 6000 மலேசிய மழைக்காடு மரங்கள் நிறைந்தது என அறிமுக விழாவில் பிரதமர் நஜிப் தெரிவித்துள்ளார்.
அதோடு, அமெரிக்காவில் நியூயார்க் நகரின் அடையாளமாக செண்ட்ரல் பார்க் இருப்பது போல், கோலாலம்பூருக்கு இந்த தாமான் துகு பூங்கா அடையாளமாக இருக்கும் என்று நஜிப் தெரிவித்துள்ளார்.