இது குறித்து டெஸ்கோ ஸ்டோர்ஸ் (மலேசியா) செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி பால் ரிட்சி கூறுகையில், அது போன்ற தகவல்கள் வெளிவருவதை அறிவோம், ஆனால் அது நிறுவனத்திலிருந்து வந்த அதிகாரப்பூர்வ தகவல் கிடையாது என்று என்எஸ்டி செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமது வாடிக்கையாளர்களுக்காகத் தொடர்ந்து நிறுவனம் இயங்கும் என்றும், மலேசியாவில் தங்களது வர்த்தகத்தை மேம்படுத்த கடும் உழைப்பைக் கொடுப்போம் என்றும் பால் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, நம்பகமான அறிவிப்புகள், நிறுவனத்தின் இணையதளத்திலும், பேஸ்புக் பக்கத்திலும் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.