Home Featured தமிழ் நாடு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் – ஜெயலலிதா வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் – ஜெயலலிதா வாழ்த்து!

1226
0
SHARE
Ad

Ganesh-Chaturthi-Images-HDசென்னை – இன்று விநாயகர் சதுர்த்தி விழா, தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

விநாயகர் ஆலயங்களில் இன்று திங்கட்கிழமை காலை பக்தர்கள் திரளாக தரிசனம் செய்து வருகின்றனர்.

சென்னையில் மட்டும் சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

இதனிடையே, உலகில் அன்பும் அமைதியும் நிலவட்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா, விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

“விநாயகப்பெருமான் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகள். சகல கணங்களுக்கும் தலைவனாகிய கணபதியாய், தடைகளைத் தகர்க்கும் விக்னேஸ்வரராய் விளங்கும் விநாயகப் பெருமானை வணங்கினால் வாழ்வில் வளம் பெருகும், அறிவு மிகும், துன்பங்களுக்குக் காரணமான வினைகள் அகலும், தொடங்கிடும் நற்காரியங்கள் தங்கு தடையின்றி சிறப்புடன் நடக்கும் என்பது மக்களின் இறை நம்பிக்கை.”

“ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி அன்று விநாயகப் பெருமான் அவதரித்த சதுர்த்தி நாளை மக்கள் பக்தியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் உலகில் அன்பும் அமைதியும் நிலவட்டும். நலமும் வளமும் பெருகட்டும் என வாழ்த்துகிறேன்” இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.