Home One Line P2 ஜெயலலிதா 73-வது பிறந்தநாள் அதிமுக தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது

ஜெயலலிதா 73-வது பிறந்தநாள் அதிமுக தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது

723
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73- வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இம்முறை ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் அதிமுக அரசு பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

#TamilSchoolmychoice

மேலும், ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“மக்கள் நலத்திட்டங்கள், ஏழை மக்கள் அதிகாரம் பெற ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிக்காக அனைவராலும் பாராட்டப்பட்டவர். பெண்கள் முன்னேற்றத்திற்காக உழைத்தவர். அவருடன் நடத்திய ஆலோசனைகளை நான் எப்போதும் நினைவு கூர்வேன்,” என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.