Home Featured நாடு போர்ட்டிக்சன் கடற்கரை அருகே பிரிட்டிஷ் கால வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!

போர்ட்டிக்சன் கடற்கரை அருகே பிரிட்டிஷ் கால வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!

710
0
SHARE
Ad

JUMPA BOM

போர்டிக்சன் – பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில், பயன்படுத்தப்பட்ட மோர்டார் குண்டுகள், போர்ட்டிக்சன் கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடற்கரை அருகே நடைபெறும் மேம்பாட்டுத் திட்டம் ஒன்றில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், டஜன் கணக்கில் வெடிகுண்டுகளைக் கண்டறிந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

மிகவும் துருப்பிடித்த நிலையில் காணப்படும் அக்குண்டுகள் பிரிட்டிஷ் காலத்தைச் சேர்ந்தது என்றும், இன்னும் அபாயகரமானது தான் என்றும் போர்ட்டிக்சன் ஓசிபிடி துணைக் கண்காணிப்பாளர் அட்ஸ்லி அபு ஷா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2 கிலோ எடை கொண்ட அக்குண்டுகள், வெடிகுண்டு நிபுணர்களால் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தகவல், படம்: Metro