Home நாடு போர்ட்டிக்சன் : பக்காத்தான் வேட்பாளராக நெகிரி மந்திரி பெசார் அமினுடின் போட்டி

போர்ட்டிக்சன் : பக்காத்தான் வேட்பாளராக நெகிரி மந்திரி பெசார் அமினுடின் போட்டி

397
0
SHARE
Ad

போர்ட்டிக்சன் : தற்போது அன்வார் இப்ராகிம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போர்ட்டிக்சன் தொகுதியில் மீண்டும் அவர் போட்டியிடாமல் பேராக்கிலுள்ள தம்பூன் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரும் பிகேஆர் மாநிலத் தலைவருமான அமினுடின் ஹாருண் போர்ட்டிக்சன் பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கிடையில் கைரி ஜமாலுடின் போர்ட்டிக்சன் அல்லது தம்பின் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது எதிர்க்கட்சி வசம் இருக்கும் தொகுதி ஒன்றில் தான் போட்டியிடப் போவதாகத் தெரிவித்திருக்கும் கைரி அந்தத் தொகுதி எந்த மாநிலத்தில் இருக்கிறது என்பதைத் தெரிவிக்கவில்லை.

#TamilSchoolmychoice

நெகிரி செம்பிலானில் தம்பின், போர்ட்டிக்சன் ஆகிய இரு தொகுதிகள் தற்போது எதிர்க்கட்சிகள் வசம் இருக்கின்றன. மற்ற தொகுதிகள் ஜசெக, அல்லது தேசிய முன்னணி வசம் இருக்கின்றன. தம்பினை அமானா கட்சி தற்காக்கிறது. போர்ட்டிக்சனை பிகேஆர் தற்காக்கிறது.

எனவே, கைரி நெகிரி செம்பிலானின் போட்டியிட்டால் தம்பின் அல்லது போர்ட்டிக்சனில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.