Home நாடு நெகிரி செம்பிலான் : அமினுடின் ஹாருண் மீண்டும் மந்திரி பெசார் – இந்தியர் ஆட்சிக் குழு...

நெகிரி செம்பிலான் : அமினுடின் ஹாருண் மீண்டும் மந்திரி பெசார் – இந்தியர் ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பனா? அருள்குமாரா?

597
0
SHARE
Ad

சிரம்பான் : நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மந்திரி பெசாராக 2-வது தவணைக்கு அமினுடின் ஹாருண் இன்று திங்கட்கிழமை பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

36 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கிறது நெகிரி செம்பிலான். சிக்காமாட் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமினுடின் ஹாருண் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் 15-வது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நெகிரி செம்பிலானில் இந்த முறை 4 இந்தியர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2018 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் 6 இந்தியர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். ஜசெக சார்பில் 4 பேரும் பிகேஆர் சார்பில் ஒருவரும் மஇகா சார்பில் ஒருவரும் நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தில் வெற்றி பெற்றிருந்தனர்.

#TamilSchoolmychoice

ஆகஸ்ட் 12 சட்டமன்றத் தேர்தலில் நீலாய் தொகுதியில் அருள்குமார் ஜம்புநாதன், சிரம்பான் ஜெயா தொகுதியில் குணசேகரன், ரெப்பா தொகுதியில் வீரப்பன் ஆகிய மூவரும் ஜசெக சார்பில் வெற்றி பெற்றனர்.

பிகேஆர் சார்பில் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் ராஜசேகரன் 3,996 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றிகளைத் தொடர்ந்து ஆட்சிக் குழுவில் இந்தியர் சார்பில் ஜசெக பிரதிநிதி இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை 2 இந்தியர்கள் நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழுவில் இடம் பெற்றனர்.

வீரப்பன் சுப்பிரமணியம் மீண்டும் ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்படுவாரா? அல்லது அருள்குமார் மீண்டும் ஆட்சிக் குழு உறுப்பினராகத் திரும்புவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய அருள்குமார், அதன்பின்னர் போக்குவரத்து அமைச்சராக இருக்கும் அந்தோணி லோக்கின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டார். அரசியல் செயலாளராகவே தொடர்வாரா? அல்லது ஆட்சிக்குழு உறுப்பினராகத் திரும்புவாரா?