Home நாடு “உரிமை” கட்சி அறிமுகக் கூட்டங்கள் நாடெங்கிலும் நடைபெறுகின்றன

“உரிமை” கட்சி அறிமுகக் கூட்டங்கள் நாடெங்கிலும் நடைபெறுகின்றன

999
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடந்த நவம்பர் 26-ஆம் தேதி பேராசிரியர் பி.இராமசாமி தலைமையிலான ‘உரிமை’ கட்சியின் தொடக்க விழா,  கோலாலம்பூர் ஜாலான் ஹாங் கஸ்தூரியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றதைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் அறிமுகக் கூட்டங்கள் நாடெங்கிலும் நடைபெறத் தொடங்கியுள்ளன.

அந்த வரிசையில் இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 10-ஆம் தேதி பிற்பகல் 2.00 மணி தொடங்கி 5.00 மணி வரையில் நெகிரி செம்பிலான் இந்தியர்களுடனான சந்திப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் கீழ்க்காணும் முகவரியில் நடைபெறும்:

Peacock Palace Hall, Seremban 2,
No: 148-1, Lorong Haruan 5/5,
Oakland Commercial Centre, 70300 Seremban

#TamilSchoolmychoice

உரிமை கட்சியின் அமைப்புக் குழுவினர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் இலக்குகள் குறித்து விளக்கம் அளிப்பர்.

இராமசாமியும் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவார்.