Home நாடு “உரிமை” – இராமசாமி தொடங்கும் புதிய கட்சி

“உரிமை” – இராமசாமி தொடங்கும் புதிய கட்சி

568
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி தன் அடுத்தகட்ட அரசியல் பயணத்தைத் தொடக்கியுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் 26-ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு தலைநகர், பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்திலுள்ள நுண்கலை ஆலயத்தின் (Temple of Fine Arts) கனகசபை மண்டபத்தில் “உரிமை” என்னும் பெயரிலான புதிய அரசியல் கட்சியை இராமசாமி தொடங்கவிருக்கிறார்.

இதற்கான அறிவிப்பை அவர் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ஜசெகவில் இருந்து வெளியேறிய பின்னர், இராமசாமியின் அடுத்த கட்ட அரசியல் பயணம் எதை நோக்கி இருக்கும் என்ற கேள்விகள் இந்திய சமூகத்தில் விவாதிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார் இராமசாமி.