கோலாலம்பூர் : பகாங் மாநிலத்தின் மாரான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் அப்துல் முத்தலீப் தேசிய இதயநோய் மருத்துவக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை நாடாளுமன்ற அவைத் தலைவர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 21) நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் அறிவித்தார்.
அவரைச் சந்திப்பதற்கு மருத்துவமனை நிர்வாகம் இப்போது யாருக்கும் அனுமதி தரவில்லை என்றும் ஜோஹாரி தெரிவித்தார்.
அவர் விரைவில் குணமடைந்து திரும்ப பிரார்த்திப்போம் என்றும் ஜோஹாரி தெரிவித்தார்.
கடந்த 15-வது பொதுத் தேர்தலில் இஸ்மாயில் அப்துல் முத்தலீப் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக பாஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதற்கு முன்னர் அவர் அம்னோ-தேசிய முன்னணி சார்பில் மாரான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்து வந்தார். 2022 பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததைத் தொடர்ந்து அவர் அம்னோவிலிருந்து விலகி பாஸ் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு மீண்டும் அதே மாரான் தொகுதியில் போட்டியிட பாஸ் வாய்ப்பு வழங்கியது. அவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.