Home கலை உலகம் ஆஸ்ட்ரோ நேர்காணல் – தீபாவளியின் முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் 2022

ஆஸ்ட்ரோ நேர்காணல் – தீபாவளியின் முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் 2022

569
0
SHARE
Ad

அக்டோபர் 24 திங்கட்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன. அந்த நிகழ்ச்சிகள் குறித்த நேர்காணல்:

ஆஸ்ட்ரோ வானவில்

உமாசங்கரி யோமரகுரோ, தயாரிப்பாளர், ‘ஓ மை பேக்கரி’

  1. ஓ மை பேக்கரி, ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் ஒளியேறும் ஒரு சமையல் நிகழ்ச்சி – ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் இரசிக்கக்கூடிய இந்நிகழ்ச்சியின் சில சிறப்பு அம்சங்கள் யாவை?
உமாசங்கரி

இது ஒரு வேடிக்கையான, மகிழ்ச்சியான மற்றும் பல தகவல்களை வழங்கும் ஒரு நிகழ்ச்சி. சுமார் 40 சமையல் வகைகளை எளிதாகத் தயாரிக்கச் செஃப் ஹான்ஸால் தனிப்பயனாக்கப்பட்டச் சமையல் குறிப்புகளை இந்நிகழ்ச்சி வழங்குகிறது. மேலும், சிறப்பு விருந்தினர்கள், வீட்டுப் பேக்கர்கள் மற்றும் பிற முக்கியப் பிரமுகர்கள் தங்கள் நுண்ணறிவைப் பகிர்ந்துக் கொள்வர். ஓ மை பேக்கரி குடும்பம் மற்றும் Prevail Productions Sdn. Bhd.-ஐச் சேர்ந்த நாங்கள் இவ்வேளையில் அனைத்து இரசிகர்களுக்கும் இனிய தீபாவளி மற்றும் மகிழ்ச்சியானச் சமையல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

ஆனந்தா, தொகுப்பாளர்,அமர்க்கள தீபாவளி 2022′

  1. அமர்க்கள தீபாவளி 2022 சிங்கப்பூர் நேரலை பல்ரக நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியின் மீதான உங்களின் சில நம்பிக்கைகள் யாவை?
ஆனந்தா

கூட்டாண்மை எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று. அதே போல், சிங்கப்பூர் கலைஞர்களையும் மக்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும். ‘வேட்டை சீசன் 5’-இல் வர்மாவாக நடித்த பிறகு, சிங்கப்பூர் மக்களிடையே நான் பரிச்சயமான முகமானேன். பாடுவது மற்றும் தொகுத்து வழங்குவது இரண்டும் எனக்கு மிகவும் விருப்பமானதாகும். இந்த நிகழ்ச்சியில் இரண்டையும் செய்ய எனக்கு வாய்ப்புக் கிடைத்ததால் இந்நிகழ்ச்சி என் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாகும். என்னைத் தவிர, ‘பிக் ஸ்டேஜ் தமிழ்’ வெற்றியாளர்களான அருளினி மற்றும் ரோஷினி ஆகியோரும் பிரபல சிங்கப்பூர் கலைஞர்கள் மற்றும் தொகுப்பாளர்களுடன் இணைந்துத் தங்களதுப் படைப்புகளை வழங்குவர். இந்தத் தீபாவளிக்கு மலேசியா மற்றும் சிங்கப்பூர் இரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த விருந்தாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அமர்க்கள தீபாவளி 2022 உடன் ஒரு சிறந்த தீபாவளி கொண்டாட்டத்தை எதிர்ப்பார்க்கிறேன்!

காந்திமதி சுப்பையா, நிர்வாகத் தயாரிப்பாளர், ‘அழகு குட்டி செல்லம்’

  1. இந்தப் பல்தர இசை நிகழ்ச்சியைத் தயாரித்த அனுபவம் எவ்வாறு இருந்தது மற்றும் இந்த நிகழ்ச்சியிலிருந்து வாடிக்கையாளர்கள் எதனை எதிர்ப்பார்க்கலாம்?
காந்திமதி
#TamilSchoolmychoice

குழந்தைகளுடன் பணிபுரிந்ததும், ஒரு கலாச்சாரக் கதாப்பாத்திரத்தைக் கொண்ட ஒரு வேடிக்கையானப் பொழுதுபோக்கு நிகழ்ச்சியை உருவாக்கியதும் ஒரு புதிய அனுபவமாக இருந்தது. குழந்தைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் குறும்புத்தனமான மற்றும் மகிழ்ச்சியான நிகழ்ச்சியை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

டத்தின் ஸ்ரீ ஷைலா நாயர் வி, தயாரிப்பாளர், ‘குட்டிப் பட்டாஸ்’

  1. இந்த நகைச்சுவை டெலிமூவியைத் தயாரிப்பதற்க்கான உத்வேகம் என்ன? வாடிக்கையாளர்கள் எதை எதிர்ப்பார்க்கலாம்?
ஷைலா நாயர்

குழந்தைகளுடன் பணிபுரிவது எப்போதும் ஒரு சிறந்த தருணம்தான். சமாளிப்பதற்கு ஒரு நேரத்தில் சுமார்  20 குழந்தைகள் படப்பிடிப்பு இடத்தில் இருந்ததால், இது ஒரு இனிமையான ரோலர் கோஸ்டர் சவாரி என்றுதான் கூறுவேன். இந்தக் குழந்தைகள் கவனம் செலுத்துவதையும், ஸ்கிரிப்ட்டின் தேவைகளை நிறைவேற்றுவதையும் உறுதிச் செய்ய மிகவும் சவாலானதாக இருந்தது. அவர்கள் மகிழ்ச்சியாகவும் கவனம் செலுத்துபவர்களாகவும் இருப்பதை உறுதிச் செய்வதற்காக நாங்கள் அவர்களை உபசரிக்க வேண்டிய நேரங்களும் இருந்தன. ஆதரவற்றோர் இல்லங்களைத் தவறாகக் கையாளுவதைப் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இதனால் இந்த வீடுகளின் பராமரிப்பாளர்கள் அல்லது உரிமையாளர்கள் மீதான நம்பிக்கைச் சிலருக்குக் குறைந்திருக்கும் அல்லது அழிந்திருக்கும். இருப்பினும், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சிறப்புத் தேவையுடையவர்களை நன்றாகக் கவனித்துக் கொள்ளும் உண்மையானத் தன்னலமற்றவர்கள் இந்த வீடுகளில் உள்ளனர். இந்த டெலிமூவியின் மூலம் நாங்கள் இக்கருத்தைப் பதிவுச் செய்ய விரும்பினோம். குட்டிப் பட்டாஸ் தாய்க்கும் மகனுக்கும் இடையிலான உறவின் மேம்பாட்டிலும் கவனம் செலுத்துகிறது. சில காதல் கூறுகளுடன் மிகவும் உண்மையான, தொடர்புபடுத்தக்கூடிய, வேடிக்கையான, உணர்ச்சிகரமானக் கதைக்களத்தால் இரசிகர்கள் ஈர்க்கப்படுவார்கள். சிறந்த வாய்ப்பிற்காக ஆஸ்ட்ரோவுக்கு நன்றி கூறுகிறோம்.

சந்தோஷ் கேசவன், இயக்குநர் & தயாரிப்பாளர், ‘நரை வந்த பிறகு’

  1. இந்த நாடக டெலிமூவியை இயக்கிய மற்றும் தயாரித்த அனுபவம் எவ்வாறு இருந்தது மற்றும் இரசிகர்களுடன் பகிர்ந்துக் கொள்ள நீங்கள் ஆர்வமாக உள்ள இந்த டெலிமூவியின் தனித்துவமான அம்சங்கள் யாவை?
சந்தோஷ் கேசவன்

பினாங்கில் படப்பிடிப்பின் போதுச் சில சவால்களை எதிர்கொண்டாலும் நரை வந்த பிறகு டெலிமூவியை இயக்கியது மற்றும் தயாரித்தது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. மாறன் மற்றும் டேவிட் இருவரும் தங்கள் கதாபாத்திரங்களைச் சிறப்பாக நடித்தனர். விடுமுறை நாட்களை ஒன்றாகத் திட்டமிட்டுத் தங்கள் பயணத்தை அனுபவிக்கும் இந்த இரண்டு நண்பர்களையும் இரசிகர்கள் இரசிக்க முடியும் மற்றும் எளிதாக அவர்களுடன் தங்களை இணைக்க முடியும். இந்த டெலிமூவியில் இரசிகர்கள் நிறையச் சஸ்பென்ஸ்களையும் எதிர்ப்பார்க்கலாம்.

ஆஸ்ட்ரோ விண்மீன்

புவோவின் சண்டெரா, தயாரிப்பாளர், ‘பட்டாஸ் ஜோடி’

  1. ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் இரசிப்பார்கள் என்று நீங்கள் நம்பும் இந்த டெலிமூவியின் சில சிறப்பு அம்சங்கள் யாவை?
புவோவின் சண்டெரா

இரண்டு வகையான ஜோடிகளைக் கொண்ட மிகச் சிறப்பான டெலிமூவி – நகைச்சுவை மற்றும் அதே அளவு ஆற்றல் மிக்க முதிர்ந்த ஜோடியுடன் ஒரு துடிப்பான இளம் ஜோடி. நமது வளமான உள்ளூர் இந்தியக் கலாச்சாரக் கலவையால் நிரப்பப்பட்ட ஒரு வேடிக்கையான உள்ளூர் கதையாகும். முன்னணி நடிகர்களக் கொண்டக் கார் பந்தயம் மற்றும் டிரிஃப்டிங் காட்சிகளை இரசிகர்கள் நிச்சயம் தவறவிட மாட்டார்கள். எங்களின் பூனை ப்ரிமடோனாஇந்த டெலிமூவியில் ஒரு சிறந்தக் காட்சியில் வலம் வருவதால் விலங்குப் பிரியர்கள் ஆச்சரியத்தை எதிர்ப்பார்க்கலாம்.

ஆஸ்ட்ரோ உலகம்

குப்புசாமி சண்ரகாஸ், நிர்வாகத் தயாரிப்பாளர், ‘கண்ணா முறுக்கு தின்ன ஆசையா’

  1. இந்தத் திகில் நகைச்சுவை வலைத் தொடரைத் தயாரித்ததற்கான உங்களின் உத்வேகம் என்ன மற்றும் உங்களின் அனுபவம் எவ்வாறு இருந்தது?
குப்புசாமி சண்ரகாஸ்

இது ஒரு சிறந்த அனுபவம். சுதேசன், சுகந்தி, கோமதி, கவிதா உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆஸ்ட்ரோ உலகம் குழு உறுப்பினர்களும் இந்த வலைத் தொடரை வெற்றிபெறச் செய்யத் தங்களின் 200% முயற்சியையும் கடின உழைப்பையும் வழங்கினர். இது சீசன் 1-இன் தொடர்ச்சி மற்றும் இந்த சீசனில் ‘முறுக்கு’ குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்கும். விக்கி, குபென், ஷேபி, ஹேமா ஜி, ஹம்சினி, ஷான் மற்றும் கோகிலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் சிறப்பாகப் பணியாற்றினர், குறிப்பாக நீண்ட படப்பிடிப்பு நேரத்தில் ஒத்துழைத்தனர்.