Home One Line P2 போர்ட்டிக்சன் “அவில்லியன்” தங்கும் விடுதியும் நிலங்களும் 382 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கப்படலாம்

போர்ட்டிக்சன் “அவில்லியன்” தங்கும் விடுதியும் நிலங்களும் 382 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கப்படலாம்

673
0
SHARE
Ad

போர்ட்டிக்சன் “அவில்லியன்” தங்கும் விடுதியும் நிலங்களும் 382 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கப்படலாம்

போர்ட்டிக்சன் – கடலோரமாக வரிசையாகத் தங்கும் விடுதிகளைக் கொண்டிருக்கும் சுற்றுலா நகர் போர்ட்டிக்சன். இங்கு அமைந்திருக்கும் புகழ்பெற்ற தங்கும் விடுதிகளில் ஒன்று “அவில்லியன்” என்னும் தங்கும் விடுதியாகும்.

கடலுக்குள் நீட்டிக்கப்பட்டு கட்டப்பட்ட சொகுசு அறைகளைக் கொண்ட அவில்லியன் விடுதியின் உரிமை பெற்ற நிறுவனம் அதே பெயரில் கோலாலம்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும்.

#TamilSchoolmychoice

போர்ட்டிக்சன் தங்கும் விடுதியையும் அங்குள்ள நிலங்களையும் 382 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கிக் கொள்ள சீனாவின் குவாங்சி ஈஸ்ட் ஹங்யாங் இன்வெஸ்ட்மெண்ட் குரூப் என்னும் நிறுவனம் முன்வந்துள்ளது.

இந்தப் பரிந்துரையை அவில்லியன் நிறுவனம் கோலாலம்பூர் பங்குச் சந்தையில் முறையாக அறிவித்திருக்கிறது.