அந்த செய்தியை சபா முதலமைச்சர் ஷாபி அப்டாலின் அலுவலகம் அறிக்கை ஒன்றின் வழி மறுத்தது.
இன்று புதன்கிழமை மாலை மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போலவே ஷாபி அப்டால் மாமன்னரின் அரண்மனைக்கு நேரடியாகச் சென்று தனக்குரிய கடமைகளை மாமன்னர் முன்னிலையில் நிறைவேற்றினார் எனவும் சபா முதலமைச்சர் அலுவலகத்தின் அறிக்கை மேலும் தெரிவித்தது.
எனவே, ஷாபி அப்டால் ஒருவர் பிரதிநிதியை அனுப்பினார் என்றும் அவர் மாமன்னரின் அரண்மனை அதிகாரிகளால் திருப்பி அனுப்பப் பட்டார் என்றும் வெளிவந்திருக்கும் செய்தியில் உண்மையில்லை என்றும் ஷாபி அப்டாலின் அலுவலக அறிக்கை தெரிவித்தது.