Home One Line P1 மாமன்னரை இதுவரை சந்திக்காத 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

மாமன்னரை இதுவரை சந்திக்காத 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

930
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஏறத்தாழ அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நேற்றும் இன்றும் மாமன்னர் நேரடியாகச் சந்தித்து தங்களின் நிலைப்பாட்டைத் தெரிவித்து விட்ட நிலையில், இன்னும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் மாமன்னரைச் சந்திக்கவில்லை. அதற்கான காரணமும் சரியாகத் தெரியவில்லை.

அம்னோவின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் நஸ்ரி அசிஸ் மற்றும் சபா முதலமைச்சர் ஷாபி அப்டால் ஆகிய இருவருமே அந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.

நஸ்ரி அசிஸ் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் தனது சார்பாக தனது பிரதிநிதி ஒருவரை ஷாபி அப்டால் மாமன்னரைச் சந்திக்க அனுப்பி வைத்ததாகவும், ஆனால், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தானே நேரடியாகச் சந்திக்கவிருப்பதால், ஷாபி அப்டாலின் பிரதிநிதியைச் சந்திக்காமல் மாமன்னர் திருப்பி அனுப்பினார் என்றும் அரண்மனை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அம்னோ – பாஸ் கட்சியினர் மீண்டும் பொதுத் தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில் பிகேஆர், ஜசெக, அமானா உள்ளிட்ட நம்பிக்கைக் கூட்டணி அன்வாரை அடுத்த பிரதமராக முன்மொழிந்துள்ளனர்.