Home நாடு அன்வாருக்கு ஆதரவாக சத்திய பிரமாண ஆதரவுக் கடிதம் தந்தேன் – நஸ்ரி ஒப்புதல்

அன்வாருக்கு ஆதரவாக சத்திய பிரமாண ஆதரவுக் கடிதம் தந்தேன் – நஸ்ரி ஒப்புதல்

594
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அம்னோவில் வெடித்துள்ள உட்பூசலைத் தொடர்ந்து இதுநாள் வரை மறைமுகமாகப் பேசப்பட்டு வந்த விவகாரங்கள் இப்போது பூதாகாரமாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ், அன்வார் இப்ராகிம் பிரதமராவதற்கான ஆதரவு சத்தியப் பிரமாணக் கடிதத்தில் தானும் கையெழுத்திட்டதாக ஒப்புக் கொண்டார்.

அம்னோவைக் காப்பாற்றவே அந்த முடிவுக்கு ஒப்புக் கொண்டு தான் சத்தியப் பிரமாணக் கடிதத்தில் கையெழுத்திட்டதாக நஸ்ரி குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி, அன்வார் பிரதமராவதற்கு சத்தியப் பிரமாண ஆதரவுக் கடிதங்களை திரட்டுவதற்கு முயற்சிகள் எடுத்தார் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.