Home இந்தியா எழுத்தாளர் மாலனுக்கு, மொழி பெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது

எழுத்தாளர் மாலனுக்கு, மொழி பெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது

695
0
SHARE
Ad

சென்னை : எழுத்தாளரும், பத்திரிகையாளருமான மாலன் எழுதிய ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ எனும் மொழிபெயர்ப்பு நூலுக்கு சாகித்திய அகாடமியின் மொழிபெயர்ப்புக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “மொழிபெயர்ப்புக்காக #SahityaAkademi விருது பெற்றுள்ள ஊடகவியலாளர் நாராயணன் (எ) மாலன் அவர்களுக்கு வாழ்த்துகள்! அறிவார்ந்த படைப்புகள் தமிழாக்கம் பெற்று நம் கைகளில் தவழ்ந்திட வேண்டும்!” என ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

மாலன் மலேசியாவுக்கும் வருகை தந்து இலக்கியக் கூட்டங்களில் பங்கெடுத்திருக்கிறார். தமிழ் நாட்டின் தொலைக்காட்சி ஊடகங்களில் விவாதக் களங்களில் கலந்து கொண்டு தனது அரசியல், சமூகக் கருத்துகளை அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறார்.