Home உலகம் அமெரிக்காவில் ஒரே வாகனக் கொள்கலனில் 46 மனித சடலங்கள்

அமெரிக்காவில் ஒரே வாகனக் கொள்கலனில் 46 மனித சடலங்கள்

469
0
SHARE
Ad

வாஷிங்டன் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள சான் அந்தோணியோ நகரில் சந்தேகமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனக் கொள்கலன் ஒன்றைப் பரிசோதித்ததில் அதனுள் இறந்து போன 46 பேர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இவர்கள் மெக்சிகோ, குவாட்டமாலா, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் இருந்து தொழிலாளர்களாக கடத்தி வரப்பட்டவர்கள் என நம்பப்படுகிறது. மனிதக் கடத்தல் வரலாற்றில் அமெரிக்காவில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவமாக இது பார்க்கப்படுகின்றது.