உள்ளூர் தமிழ் குடும்ப நாடகத் தொடர் ‘உப்புரொட்டி சிதம்பரம்’ ஜூலை 4 முதல் ஆஸ்ட்ரோ வானவிலில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது
கோலாலம்பூர் – ஜூலை 4 முதல், ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் ‘உப்புரொட்டி சிதம்பரம்’ எனும் இதயத்தை நெகிழச்செய்யும் உள்ளூர் தமிழ் குடும்ப நாடகத் தொடரை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு களிக்கலாம்.
பிரபல உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளரான ஷாலினி பாலசுந்தரம் கைவண்ணத்தில் மலர்ந்த, 35-அத்தியாயங்களைக் கொண்டச் சுவாரசியமானத் இத்தொடரில் நதியா ஜெயபாலன், கபில் கணேசன், தாஷா கிருஷ்ணகுமார், கே. குணசேகரன், கோமள நாயுடு மற்றும் கவிதா உள்ளிட்டத் திறமையான உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர். தனதுக் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்காக ஒரு சிறிய மளிகைக் கடையை நடத்தும் 65 வயதுச் சிதம்பரத்தை இத்தொடர் சித்தரிக்கின்றது. பொதுவான அன்றாட வாழ்வில் மகிழ்ச்சி, விரக்திகள் மற்றும் பலவற்றைச் சந்தித்தாலும் ஒருவருக்கொருவர் ஆர்வத்தையும் அன்பையும் நிலைநிறுத்த முயற்சிக்கும் போது அவர்களிடையே ஏற்படும் வினோதங்கள் மற்றும் தனித்தன்மைகளால் இரசிகர்கள் ஈர்க்கப்படுவர்.
உப்புரொட்டி சிதம்பரம் தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9.30 மணிக்குத் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டுக் களியுங்கள் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.
மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.