Home நாடு நஜிப் ஏன் எனக்கான ஆதரவை மீட்டுக்கொண்டார்? – அன்வார் விளக்கம்

நஜிப் ஏன் எனக்கான ஆதரவை மீட்டுக்கொண்டார்? – அன்வார் விளக்கம்

632
0
SHARE
Ad

போர்ட்டிக்சன் : தனக்கான ஆதரவு சத்தியப் பிரமாணக் கடிதங்கள் தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் நஜிப் துன் ரசாக்கும் ஒருவர் என அன்வார் இப்ராகிம் பகிரங்கமாக அறிவித்தார். இருந்தாலும் பின்னர் தனக்கான ஆதரவை அவர் மீட்டுக் கொண்டார் என்று கூறிய அன்வார், பிரதமரானதும் தன் மீதான வழக்குகளை மீட்டுக் கொள்ள வேண்டும் என நஜிப் கேட்டுக் கொண்டார் என்றார்.

அதற்கு நான் ஒப்புக் கொள்ள மறுத்ததால் நஜிப் எனக்கான ஆதரவை மீட்டுக் கொண்டார் என்றும் அன்வார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், 2020-இல் பிரதமராக அம்னோவைச் சேர்ந்த 15 பேர் உட்பட 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாகவும், ஆனால் நஜிப் அப்துல் ரசாக்கின் நீதிமன்ற வழக்குகளில் தலையிட மறுத்ததால் எண்ணிக்கை குறைக்கப்பட்டது என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

போர்ட்டிக்சனில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார்,  நஜிப்பும் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹாமிடியும்  தனக்கு ஆதரவு வழங்கியவர்களில் அடங்குவர்.

அன்வாரின் கூற்றுப்படி, அம்னோ எம்.பி.க்கள் தங்களின் சத்தியப் பிரமாணக் கடிதங்களை அவர் மூலம் அரண்மனைக்கு அனுப்பவில்லை. மாறாக நேரடியாக அரண்மனைக்கு அனுப்பினர்.

இருந்தாலும், நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கியிருந்த நஜிப், சாஹிட் இருவரின் ஆதரவை ஏற்றுக் கொள்வதில்லை என்ற பக்காத்தான் ஹாரப்பானின் கொள்கை முடிவுக்கு ஏற்ப அவர்களின் ஆதரவைத் தாங்கள் பெறவில்லை என அன்வார் தெரிவித்தார். அப்படியிருந்தும் தங்களுக்கு அந்த காலகட்டத்தில் 118 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது உறுதியானது என்றும் அன்வார் குறிப்பிட்டார்.