Home வணிகம்/தொழில் நுட்பம் டெஸ்கோ – “லோட்டஸ்” பேரங்காடிகளாக உருமாறுகின்றன

டெஸ்கோ – “லோட்டஸ்” பேரங்காடிகளாக உருமாறுகின்றன

752
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நமது நாட்டில் பல ஆண்டுகளாக பேரங்காடிகளாக இயங்கி வந்த நிறுவனம் டெஸ்கோ. உலகம் முழுவதும் தனது வணிகக் கட்டமைப்பைச் சீரமைக்கும் நோக்கில் டெஸ்கோ மலேசியாவில் இயங்கி வந்த தனது சொத்துடமைகளை விற்று விட்டு வெளியேறியிருக்கிறது.

அதைத் தொடர்ந்து தாய்லாந்தின் சாரோன் போக்பாண்ட் குரூப் கம்பெனி லிமிடெட் – சிபி குரூப் (Charoen Pokphand Group Co Ltd – CP Group), என்ற நிறுவனம் டெஸ்கோ பேரங்காடிகளை கடந்த டிசம்பர் 2020-இல் கையகப்படுத்தியது.

லோட்டஸ்எஸ் என்ற பெயரில் டெஸ்கோ பேரங்காடிகள் தற்போது பெயர்மாற்றம் கண்டு இயங்கி வருகின்றன.

#TamilSchoolmychoice

மேலும், பினாங்கிலும் ஜோகூரிலும் புதிய கிளைகளையும் லோட்டஸ்எஸ் (Lotus’s Malaysia) திறந்துள்ளது.

பினாங்கில் பினாங் இ-கேட் என்ற பேரங்காடியையும் ஜோகூரில் டேசா தெப்ராவ் பகுதியில் மற்றொரு பேரங்காடியையும் லோட்டஸ்எஸ் திறந்துள்ளது.

டெஸ்கோவை கையகப்படுத்தியிருப்பதன் மூலம் தற்போது 8,600 முன்னாள் டெஸ்கோ ஊழியர்களைத் தனது நிறுவனத்தில் லோட்டஸ்எஸ் இணைத்துக் கொண்டுள்ளது.

ஒரு தலைமையகம், இரண்டு விநியோக மையங்கள், 62 பேரங்காடிக் கடைகளைத் தற்போது லோட்டஸ்எஸ் தீபகற்ப மலேசியாவில் கொண்டிருக்கிறது.

மற்றொரு புதிய பேரங்காடியை கோலாலம்பூர் கெப்போங்கிலும் லோட்டஸ்எஸ் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் திறந்தது.

சுற்றுச் சூழலுக்கு முக்கியத்துவம் தரும் விதமாக நெகிழிப் பைகளின் (பிளாஸ்டிக்) பயன்பாட்டுக்கும் தங்களின் பேரங்காடிகளில் தடை விதிக்கப்பட்டிருப்பதாக லோட்டஸ்எஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.