Home நாடு கெப்போங் பேரங்காடியில் காமுகன் காமசேட்டை! எச்சரிக்கை!

கெப்போங் பேரங்காடியில் காமுகன் காமசேட்டை! எச்சரிக்கை!

753
0
SHARE
Ad
பேரங்காடியில் அமைந்திருக்கும் நகரும் படிக்கட்டுகள் – மாதிரிப் படம்

கோலாலம்பூர் : தலைநகர் கெப்போங்கிலுள்ள பேரங்காடி ஒன்றில் உலவிக் கொண்டிருந்த காமுகன் ஒருவனால் தான் பாதிக்கப்பட்டதை பெண்மணி ஒருவர் விவரித்துள்ளார். இதன் காரணமாக, சந்தேகப்படும் வகையில் நடமாடும் நபர்கள் மீது எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

22 வயதுடைய கல்லூரி மாணவி ஒருத்தி கெப்போங்கிலுள்ள பேரங்காடியில் பொருட்களை வாங்கிக் கொண்டு நகரும் படிக்கட்டுகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்த தருணத்தில், அவரின் பின்னால் சந்தேகப்படும்படி நபர் ஒருவன் நெருங்கி வந்திருக்கிறான்.

அப்போது ஆபாசமான முறையில் விவரிக்க முடியாத வகையில் அவன் அந்தப் பெண்ணின் பின்னால் வந்து காமசேட்டை புரிந்திருக்கிறான்.

#TamilSchoolmychoice

முதலில் அவனைப் பார்த்து மிரட்டும் தோரணையில் பார்த்திருக்கிறார் அந்தப் பெண். இருப்பினும் அந்தக் காமுகன் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும், தனது ஆடையில் ஈரமான நீர்போல ஏதோ திரவம் இருப்பதைக் கண்டு அந்தப் பெண் திடுக்கிட்டிருக்கிறார்.

அப்போதுதான் அந்தக் காமுகன் செய்திருக்கும் காமசேட்டையை அந்தப் பெண்ணால் உணர முடிந்திருக்கிறது.

தான் சாமான்களை வாங்கி வைத்திருந்த தள்ளுவண்டியைக் கொண்டு அந்தக் காமுகனைத் தாக்க முற்பட்டிருக்கிறார் அந்தப் பெண். தடுக்கவும் முற்பட்டிருக்கிறார். இருப்பினும், அவன் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியிருக்கிறான்.

அவனைப் பிடியுங்கள் என அந்தப் பெண் கத்தினாலும் யாரும் உடனடியாக உதவிக்கு வரவில்லையாம். சில நிமிடங்கள் கழித்து ஓரிருவர் வந்து அந்தப் பெண்ணுக்கு உதவி செய்திருக்கிறார்கள். இருப்பினும் அதற்குள் அந்தக் காமுகன் தப்பி ஓடிவிட்டான்.

தனக்கு நேர்ந்த காமசேட்டையை அந்தப் பெண் சைனா பிரஸ் பத்திரிகையிடம் விவரித்திருக்கிறார்.

தனக்கு நேர்ந்த காமசேட்டை குறித்து அந்தப் பெண் காவல் துறையிலும் புகார் செய்திருக்கிறார். அந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சம்பந்தப்பட்ட மறைக்காணி காணொலிகளை (CCTV) காட்டுமாறும் அந்தப் பெண் பேரங்காடி நிர்வாகத்திடம் கேட்டிருக்கிறார். ஆனால், அவர்களோ அதை காவல் துறையில் மட்டுமே ஒப்படைக்க முடியும் எனக் கூறியிருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பேரங்காடிகளுக்குத் தனியாகச் செல்லும் பெண்மணிகள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும்படியும், தங்களை நெருங்கி வரும் நபர்கள் மீது முன்னெச்சரிக்கையோடு விலகி இருக்கும்படியும் சமூக ஊடகங்களில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்!