Home இந்தியா சிவ சங்கர் பாபா கைது- சென்னை கொண்டுவரப்பட்டார்

சிவ சங்கர் பாபா கைது- சென்னை கொண்டுவரப்பட்டார்

790
0
SHARE
Ad

சென்னை: ஆன்மீகத் தலைவர் எனக் கூறிக்கொண்டு கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி அனைத்துலகத் தங்கும் விடுதி பள்ளி ஒன்றை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு தொடர்பாக டில்லி சித்தரஞ்சன் பூங்கா அருகே கைதுத் செய்யப்பட்டார்.

அவரை சென்னை சிபிசிஐடி காவல் துறையினர் டில்லி காவல் துறை உதவியுடன் நேற்று கைது செய்தனர். டில்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா சென்னை சிபிசிஐடி காவல் துறையினரால் சென்னை விமான நிலையம் அழைத்து வரப்பட்டார்.

அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூரில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அவரை காவல் துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.

#TamilSchoolmychoice