Home நாடு நாடாளுமன்ற அமர்வு தேதியை பிரதமரே முடிவு செய்வார்

நாடாளுமன்ற அமர்வு தேதியை பிரதமரே முடிவு செய்வார்

857
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவின் உத்தரவுக்கு ஏற்ப நாடாளுமன்ற கூட்டத்தொடரை மறுசீரமைப்பதற்கான தேதியை நிர்ணயிக்கும் அதிகாரம் பிரதமர் மொகிதின் யாசினுக்கு உள்ளது என்று மக்களவைத் தலைவர் அசார் அசிசான் ஹருண் தெரிவித்தார்.

செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்தும் முயற்சியில் மொகிதினின் உறுதிப்பாடும் ஏற்கக்கூடியது என்று அவர் கூறினார்.

“மாமன்னரின் ஒப்புதலுடன் நாடாளுமன்றக் கூட்டத் தேதியை நிர்ணயிக்கும் அதிகாரம் பிரதமருக்கு உண்டு. அரசியலமைப்பின் படி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. கொவிட் -19 எண்ணிக்கை மற்றும் பலவற்றின் காரணமாக, நாடாளுமன்றத்தின் அமர்வு தேதி பின்னர் நிர்ணயிக்கப்படுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கொவிட் -19 தொடர்பான தேசிய மீட்புத் திட்டம் அதன் மூன்றாம் கட்டத்திற்குள் நுழையும் போது நாடாளுமன்றம் மீண்டும் கூட முடியும் என்று மொகிதின் சமீபத்தில் கூறியிருந்தார்.