கோலாலம்பூர்: உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதில் தாமதம் ஏற்படக்கூடாது என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் கூறியுள்ளார்.
மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா நேற்று நாடாளுமன்றம் விரைவில் கூட்டப்பட வேண்டும் என்று விரும்புவதாகக் கூறியிருந்தார். அதன் பிறகு, சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான், எந்த மாதத்தில் அமர்வு நடைபெற வேண்டும் என்று மாமன்னர் குறிப்பிடவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
“அரசாங்கம் உடனடியாக நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும். எந்த மாதத்தில் நாடாளுமன்றம் அமர வேண்டும் என்று மாமன்னர் கூறவில்லை என்ற காரணத்துடன் இதை தாமதப்படுத்த வேண்டாம்.
“நாடாளுமன்றத்தைத் திறப்பதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், அது ஜனநாயக விரோதமானது மட்டுமல்லாமல், முடியாட்சிக்கு ஏற்படுத்தப்படும் அவமானம் ஆகும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் மேலும் கூறினார்.