Home நாடு கொவிட் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை  250,000-ஐ தாண்டியது

கொவிட் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை  250,000-ஐ தாண்டியது

520
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாடெங்கிலும் கொவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. நாள்தோறும் இந்த தடுப்பூசிகளுக்கான எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று புதன்கிழமை (ஜூன் 24) ஒரு நாளில் மட்டும் 252,773 என்ற எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் போடப்பட்டதாக சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா (படம்) தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நாட்டில் இதுவரையில் 6,554,500 தடுப்பூசிகள் போடப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார் இவர்களில் 4,749,133  பேர் முதல் தடுப்பூசியை பெற்றிருப்பதாகவும் 1,805,367 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெற்றிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதைத்தொடர்ந்து தற்போது நாள் ஒன்றுக்கு இரண்டரை லட்சம் பேர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் அளவுக்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.