Home Featured நாடு நீதிமன்றத்தில் அன்வார் – மகாதீர் சந்திப்பு!

நீதிமன்றத்தில் அன்வார் – மகாதீர் சந்திப்பு!

1019
0
SHARE
Ad

Anwar Mahathir 1கோலாலம்பூர் – தேசியப் பாதுகாப்பு மன்ற சட்டம் 2016-க்கு எதிரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மனு மீதான விசாரணை இன்று திங்கட்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் அதில் கலந்து கொண்டார்.

Anwar Mahathirமகாதீரோடு, பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி மற்றும் முன்னாள் அம்னோ தொகுதித் தலைவர் கைருடின் அபு ஹசான் ஆகியோர் உடன் வந்தனர்.

அன்வாருக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தில், மகாதீர் இன்று நீதிமன்றத்திற்கு வந்ததாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இதனிடையே, நீதிமன்றத்தில் அன்வாரைச் சந்தித்த மகாதீர், அவருடன் கைகுலுக்கினார்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அன்வார் – மகாதீர் சந்திப்பு நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.