Home Featured தமிழ் நாடு திமுகவினர் எதிர்ப்பால் கருணாநிதியைச் சந்திக்காமல் திரும்பினார் வைகோ!

திமுகவினர் எதிர்ப்பால் கருணாநிதியைச் சந்திக்காமல் திரும்பினார் வைகோ!

993
0
SHARE
Ad

vaiko

சென்னை – இன்று சனிக்கிழமை மாலை 7.30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியைச் சந்திக்க வருகை தந்த வைகோவுக்கு, அங்கு குழுமியிருந்த திமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து அவரது காரையும் தாக்க முற்பட்டதால், வைகோ அங்கிருந்து கருணாநிதியைச் சந்திக்காமலேயே திரும்பிச் சென்றார்.

காரை விட்டு இறங்கிய வைகோ மேற்கொண்டு மருத்துவமனையில் நுழைவதற்கு அங்கு குழுமியிருந்த திமுக தொண்டர்கள் தடுக்க முற்பட்டதோடு, அங்கு கூடியிருந்த மதிமுக தொண்டர்களோடு கைகலப்பிலும் ஈடுபட்டனர்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து மீண்டும் காரில் ஏறி திரும்பிய வைகோவை நோக்கியும், அவரது காரை நோக்கியும் கையில் கிடைத்த பொருட்களை திமுகவினர் தூக்கி வீசினர்.

இன்று காலை முதல் பல மாற்றுக் கட்சித் தலைவர்கள் – அதிலும் அதிமுகவைச் சேர்ந்த தம்பித்துரை, ஜெயக்குமார் போன்றவர்கள் நேரில் வந்த போதும் – எந்தவித எதிர்ப்பும், சலசலப்பும் திமுகவினரிடத்தில் ஏற்படவில்லை.

ஆனால், கடந்த சில நாட்களாக சில விஷயங்களில் வைகோ அதிமுகவைத் தற்காத்துப் பேசி வந்தார். பல தருணங்களில் ஸ்டாலினை நேரடியாகவே தாக்கிப் பேசி வந்தார்.

வைகோ வருகை தந்தபோது மருத்துவமனையில் மு.க.ஸ்டாலினும் மற்ற குடும்பத்தினரும் உள்ளே இருந்தாலும், அவர்களுக்கு வெளியே நடந்த நிலைமை குறித்து தெரிய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகின்றது.