Home இந்தியா துரை வைகோ திருச்சியில் போட்டி!

துரை வைகோ திருச்சியில் போட்டி!

544
0
SHARE
Ad
துரை வைகோ

சென்னை : திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் எதிர்பார்த்தபடி வைகோவின் மகனும் மதிமுகவின் முதன்மைச் செயலாளருமான துரை வைகோ போட்டியிடுவார் என வைகோ அறிவித்தார்.

வைகோ தற்போது வகித்துவரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி அடுத்தாண்டு முடிவுக்கு வருகிறது. அந்தப் பதவி துரை வைகோவுக்கு வழங்கப்படலாம் என்ற ஆரூடம் நிலவிய நிலையில் திருச்சியில் அவர் போட்டியிடுகிறார்.

வெல்வதற்கு சுலபமான தொகுதியாக திருச்சி கருதப்படுகிறது. துரை வைகோ இங்கு போட்டியிடுவதால், நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான திருநாவுக்கரசுவுக்கு இங்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

#TamilSchoolmychoice

அவருக்கு வேறு தொகுதி ஒதுக்கப்படுமான என்பது இன்னும் தெரியவில்லை.