Home நாடு மகாதீர், 53 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்குப் பின் வெளியேறினார்

மகாதீர், 53 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்குப் பின் வெளியேறினார்

251
0
SHARE
Ad

கோலாலம்பூர் :  இருதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை சீர் செய்வதற்காக 2 முறை இருதய சிகிச்சை செய்து கொண்டவர் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்.

98 வயதான அவர் அடிக்கடி தேசிய இருதய மருத்துவமனைக் கழகத்தில் அடிக்கடி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஜனவரி 26-ஆம் தேதி தேசிய இருதய மருத்துவமனைக் கழகத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் 53 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற பின்னர் நேற்று திங்கட்கிழமை (மார்ச் 18) மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். தொற்றுக்காகவும், கண்காணிப்புக்காகவும் மகாதீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையில் அவரின் உடல் நலம் குறித்து பல்வேறு ஆரூடங்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், மீண்டும் நலமுடன் அவர் இல்லம் திரும்பியுள்ளார்.